
வெடுக்குநாறியில் வழிபாட்டு சுதந்திரத்திற்கு அரசாங்கம் பச்சைக்கொடி
வவுனியா வடக்கு, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென்று வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க உறுதியளித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெடுக்குநாறியில் சிவராத்திரி வழிபாட்டுக்கு இடமளித்து, சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமென்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்திய நிலையில், இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
