அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சி

அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சி

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படும் எனவும் ஒரு புதிய போரை தூண்டக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோஹாவிற்கு விஜயம் செய்து உயர் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நுட்பமான கட்டத்தில் இருந்ததால், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்ய இஸ்ரேல் சாக்குப்போக்குகளை உருவாக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )