வடக்கு லண்டனில் வானிலை எச்சரிக்கை – பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

வடக்கு லண்டனில் வானிலை எச்சரிக்கை – பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

வடக்கு லண்டனின் பிரெண்ட் பகுதியில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளியில் நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகைள ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு இலண்டனில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளியில் நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவர்கள் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்திற்குப் பிறகு பள்ளியில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாணவர்களின் பாதுகாப்புக் காரணமாக பள்ளி தற்காலிகமாக பூட்டதுடன், பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக 13 வயதுடைய சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு சம்பவ இடத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் அந்த சந்தேகநபரை, விரைவான விசாரணை நடவடிக்கையின் மூலம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு இலண்டன் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், காயமடைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் காவல்துறை தொடர்பில் இருப்பதாகவும் கூறிள்ளனர்.

சம்பவத்தின் போது தீ அலாரம் ஒலித்ததால், மாணவர்கள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு பள்ளி மைதானத்தில் திரண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த  பெற்றோர் தெரிவித்துள்ளனர். பல குழந்தைகள் பயத்தில் அழுததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பள்ளி பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடையே கவலையை அதிகரித்துள்ளதால் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருவதுடன், சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )