
ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்புக்கு மத்தியில் காசா, மேற்குக் கரையை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்
கான் யூனிஸுக்கு (Khan Younis) கிழக்கே உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் (Hebron)நகரம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதன்போது இஸ்ரேலிய படைகள் வீசிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் பலஸ்தீனியர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமரிக்க ஜனாதிபதி இடையே இன்று வெள்ளை மாளிகையில் சந்திப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
