நோர்வேயில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்க

நோர்வேயில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்க

நோர்வேயில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கை இரட்டிப்பாக  அதிகரிக்கப்படவுள்ளது.

உயர் வடக்கில் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது 1,000 பேராக உள்ள வீரர்களின் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்போருக்குப் பிறகு ஆர்க்டிக் மற்றும் உயர் வடக்கு பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதென பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி (John Healy) கூறியுள்ளார்.

இந்த திட்டங்கள் குறித்து நாளை வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் கூட்டணித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா தனது இராணுவ இருப்பை அதிகரிக்கின்றமை நேட்டோ நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )