முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு – 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு – 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு பேருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 23 பேர் இந்த வழக்கிலிருந்து நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்தது.

இந்த வழக்கில் 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022ஆம் ஆண்டு மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ பகுதியில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர்களைத் தாக்கி கொலைசெய்யப்பட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )