
ஐ.ம.ச வேட்பாளர் மீதான கொலை முயற்சி – பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது
களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்னவை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளுக்கமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 வயதான பிரதான சந்தேகநபர் பலாங்கொடை பகுதியில் நேற்று (10) கைது செய்யப்பட்டார்.
இதற்கமைய குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் , கடந்த டிசம்பர் மாதம் நாகொடை வைத்தியசாலைக்குள் சிறைக்கைதி
ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தெஹிவளை பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரைப் படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடனும் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தசம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 23 மற்றும் 24 வயதுடை இருவர் களுத்துறையிலும், பலாங்கொடையில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
