
குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரித்தானியா
குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கும், நாட்டில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குமாக முயற்சியின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் புகலிட விடுதிகளை படிப்படியாக அகற்றும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒழுங்கற்ற சட்ட விரோத இடம்பெயர்வைத் தடுப்பதற்கும் புகலிட அமைப்பை விரைவுபடுத்துவதற்குமான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதென உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
சில புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை அடைய பாதுகாப்பான ஐரோப்பிய நாடுகள் வழியாக வேண்டுமென்றே பயணிப்பதாக உள்துறை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், சட்டத்தை மீறும் புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து தங்குமிடம் மற்றும் நிதி உதவியை திரும்பப் பெறுவதாக உள்துறை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை சமீபத்திய மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான இறுக்கமான குடியேற்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
இதில் புலம்பெயர்ந்தோர் வலுவான ஆங்கில மொழித் திறன்களை வெளிப்படுத்துவதற்கான புதிய தேவைகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவோர், கடுமையான ஆங்கில மொழித் தேர்வுகளில் சித்தியடைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
