கல்வி அமைச்சின் புதிய புலமைப்பரிசில் திட்டம்

கல்வி அமைச்சின் புதிய புலமைப்பரிசில் திட்டம்

உயர்தரப் பரீட்சையில் அதிக Z-புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமக்கு விருப்பமான பட்டப்படிப்புகளைத் தொடர கல்வி அமைச்சு புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 200 வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திறமையான மாணவர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )