பிரான்ஸில் சீன உளவாளிகள் இருவர் கைது

பிரான்ஸில் சீன உளவாளிகள் இருவர் கைது

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர்டாக்ஸ் நகருக்கு அருகில் உள்ள காம்ப்ளேன்ஸ்-எட்-மேனாக் என்ற கிராமத்தில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் தோட்டத்தில் சீனர்கள் இருவர் பாரிய செயற்கைக்கோள் அண்டெனாவைப் பொருத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள்,  தங்களது இணையச் சேவைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையிரல் “பிரான்ஸின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு சக்தியொன்றுக்குத் தகவல்களை வழங்கியமை”தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This