8 ஆம் தர மாணவியை தாக்கிய ஆசிரியர்

8 ஆம் தர மாணவியை தாக்கிய ஆசிரியர்

நானுஓயாவில் பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.

மாணவியை ஆசிரியர் தேவையற்ற வார்த்தைகள் கூறி திட்டியுள்ளார். அவ்வாறு கூற வேண்டாம் என குறித்த மாணவி ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபமுற்று தம்மை ஆசிரியர் தாக்கியதாக பாதிக்கபட்ட மாணவி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

ஆசிரியர் தம்மை காதில் அறைந்து அடித்து மேசையில் தள்ளி முதுகில் தடிக்கும் அளவிற்கும் சிறுநீர் போகும் அளவிற்கும் தாக்கியதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை பாடசாலைக்கு அழைத்து சென்று இதுகுநித்து விசாரித்த போது அதிபர் விடுமுறை காரணமாக அவருக்கு இதுகுறித்து தெரியாதென அன்றைய தினம் கடமையில் இருந்து பதில் அதிபர் கூறியுள்ளார்.

மாணவியை தாக்கிய ஆசிரியரிடம் கேட்ட போது பதிலளிக்காமல் குறித்த பெற்றோரை அவர் திட்டி உள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சிகிச்சைக்காக கார்லிபேக் பிரதேச மருத்துவமனைக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்டதுடன், நானுஓயா காவல் நிலயத்தில் முறைப்பாடும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மாணவிக்கு திடீரென உடல்நிலை கடும் தலைவலி மற்றும் வைற்று போக்கு ஏற்பட்டமையின் காரணமாக நுவரெலியா பொது வைதியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை அதிபரிடம் நானுஓயா பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )