மீண்டும் அம்மா ஆட்சி மலரும்

மீண்டும் அம்மா ஆட்சி மலரும்

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தன் தலைமையின் கீழ் அம்மா ஆட்சி மீளவும் அமைக்கப்படும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இது குறித்து நான் தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் என் தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைக்கப்படும். அது எப்படி நடக்கும் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என சசிக்கலா தெரிவித்துள்ளார்.

மேலும், அம்மா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒவ்வொரு  குடும்பத்தினரும், தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் இன்றும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறோம் என சசிக்கலா மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )