
நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி
நுவரெலியா மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவுகளில் உள்ள வாகன சாரதிகள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட Gov Pay மூலம் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்தலாம்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான உத்தியோகப்பூர்வ தொடக்க விழா நேற்று இடம்பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரியந்த சந்திரசிறி மற்றும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் W. P. J. சேனாதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் LankaPay இன் பிரதிநிதிகள் நிகழ்நிலை கட்டண முறையை செயல்படுத்துவது குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவுறுத்தல்களை வழங்கினர்.
தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் உதாரி விதானகே, தொழில்நுட்ப அதிகாரி இனுகா மாயகடுவ மற்றும் LankaPay திட்ட முகாமையாளர் அமில ஏகநாயக்க ஆகியோர் கணினி பயன்பாடு மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் குறித்த அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர்.
இதன்போது, டிஜிட்டல் கட்டண செயன்முறையை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசிகள் அடையாளமாக வழங்கப்பட்டன.
Gov Pay அமைப்பு, வாகன சாரதிகள் நிகழ்நிலையில் அபராதம் செலுத்தவும், சாரதி உரிமங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கிறது.
