
ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு – 30 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் வரலாறு காணாத கடுமையான பனிப்பொழிவு காரணமாககடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை துருப்புக்களை அனுப்ப பிரதமர் சிகேரு இஷிபாவின் அரசாங்கம் உத்தரவிட்டதாக ஜப்பானிய தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பனிச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூரைகளில் இருந்து பனி விழுதல் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுதல் போன்ற உயிருக்கு ஆபத்தான சம்பவங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES உலகம்
