
ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
டாக்கா நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ரபியுல் ஆலம் இந்த தண்டனையை விதித்தார்.
இரண்டு வழக்குகளில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வழக்கில், ஹசீனாவின் மருமகன் ரத்வான் முஜீப் மற்றும் மருமகள் அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மருமகள் துலிப் ரிஸ்வானா சித்திக் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டங்களை ஒடுக்கியதில் பங்கு வகித்ததற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பங்களாதேஷூக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICTB) மரண தண்டனை விதித்துள்ளது.
ஒகஸ்ட் 2024 இல் காவல்துறை நடவடிக்கை தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பங்களாதேஷூல் ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தல்கள் மோசடியானவை என்று தீர்ப்பாயம் கண்டறிந்தது.
பங்களாதேஷூன் ஸ்தாபகத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹசீனா, 1996 முதல் 2001 வரையிலும், 2009 முதல் 2024 வரையிலும் பிரதமராகப் பணியாற்றினார்.
ஜூலை 2024 இல் தொடங்கிய மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஒகஸ்ட் ஐந்தாம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
இந்தியாவில் தஞ்சம் கோரிய ஹசீனாவிற்கு எதிராக பங்களாதேஷூல் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
