
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 145 போராளிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 145 போராளிகள் கொலை செய்யப்பட்டனர்.
தென்மேற்கு பலூசிஸ்தான் முழுவதும் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய தாக்குதல்களில் ஐந்து பெண்கள் உட்பட 31 பொதுமக்கள் மற்றும் 17 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத குழு பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதல்கள் மாகாணத்தில் பல மாதங்களாக பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்தவைத்தது.
பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இதேவேளை, கடந்த பல தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த இரண்டு நாட்களில் கொலை செய்யப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை
மிகவும் அதிகமானது என மாகாண முதல்வர் சர்ஃப்ராஸ் புக்தி (Sarfraz Bugti) தெரிவித்துள்ளார்.
இந்த போராளிகளில் சிலர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்திய ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நகர மையத்தை அடைய முயன்றாலும் தோல்வியடைந்தனர் என்றும்
அவர் தெரிவித்தார்.
