
மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த பிரித்தானியாவின் பிரபல பாடசாலை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை
இங்கிலாந்தில் ஈட்டன் (Eton)கல்லூரியின் முன்னாள் ரஷ்ய மொழி ஆசிரியர் ஜேக்கப் லேலண்ட், மாணவன் ஒருவரை 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
குறித்த ஆசிரியர் அந்த மாணவனை குடியிருப்பு பகுதிக்கு அழைத்து அங்கு மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் வழங்கிய பின்னர் பல பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Eton கல்லூரியின் தலைமை ஆசிரியர் சைமன் ஹென்டர்சன், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார்.
ஈட்டன் (Eton)கல்லூரி இங்கிலாந்தின் மிகப்பெரிய பாடசாலையாகும்.
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
