தேங்காய் எண்ணெய் மோசடி

தேங்காய் எண்ணெய் மோசடி

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் முதலாம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5000 இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை
விற்பனை செய்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This