கொழும்பில் பெரும் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கொழும்பில் பெரும் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

களனி ஆற்றில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், களனி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்த தருணத்திலிருந்தும் அடுத்த 24 மணி நேரத்திலும், சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவிலான அதிக ஆபத்துள்ள வெள்ளப்பெருக்கு நிலைமை, களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் ஏற்படக்கூடும் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களனி நதி படுகையின் பல நீரோட்டப்  பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

“மேல் நீரோட்டப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகரித்த நீர் வெளியேற்றம் மற்றும் நதி அளவீட்டு நிலையங்களில் அளவிடப்படும் நீர் மட்டங்கள் அதிகரிப்பது ஆகியவற்றுடன் இணைந்து, சில மணி நேரங்களுக்குள் நிலைமை மோசமாகிவிடும்” என்று துறை மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

“இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கடுமையாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )