
கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலின் உதவியை நாடும் இலங்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடரில் சிக்கியுள்ள மீட்கும் நடவடிக்கைகளுக்காக தற்போது கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா இதனை தெரிவித்துள்ளார“.
கடுமையான வானிலைக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இந்திய போர்க்கப்பலில் உள்ள விமானங்களைப் பயன்படுத்துவதற்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதாக கொழும்பில் இடம்பெற்று வரும் சிறப்பு ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாதகமான வானிலை இந்திய விமானங்களையும் பாதித்து வருவதாகவும், தற்போதைய நிலைமைகள் காரணமாக விமான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக, இந்திய விமானிகளால் விமானத்தை இயக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதர்களுடன் இன்று மாலை ஒரு சிறப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் போது தற்போதைய நிலைமை மற்றும் தொடர்ச்சியான பேரிடர் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு குறித்து அவர்களுக்கு விளக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
