இலங்கையின் தென்கிழக்காக காணப்படும் ஆழ்ந்த தாழமுக்கத்தின் தற்போதைய நிலை

இலங்கையின் தென்கிழக்காக காணப்படும் ஆழ்ந்த தாழமுக்கத்தின் தற்போதைய நிலை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையின் தென்கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு (Equatorial Indian Ocean) மேலாக காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது (Deep Depression) இன்று காலை (27.11.2025-08.30) அதே பிராந்தியத்தில் தற்போதும் காணப்படுகின்றது.

இது தற்போது மட்டக்களப்பில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 120km தூரத்திலும், அம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வட கிழக்காக 130km தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 640km தூரத்திலும் காணப்படுகின்றது

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையின் கடல் பிராந்தியங்களை ஊடறுத்து சென்று அடுத்த வரும் 03 மணித்தியாலத்தில் ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து இது வடக்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கை கடல் பிராந்தியங்களை ஊடறுத்து மேலும் நகர்ந்து, அதனையடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நகர்ந்து, தாழமுக்கமாக (Depression) மேலும் வலுவடையும்.

அதன்பின்னர் இது மேலும் வலுவடைந்து, தொடர்ச்சியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை ஊடறுத்து வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி அதனையடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )