
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது
பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அளுத்கம, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்களிடம் இருந்து 595 சிகரெட் அட்டைப்பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த மூன்று நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா மூன்று லட்சம் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
CATEGORIES இலங்கை
