
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் 48 வீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் உலகளவில், புதிய எச்.ஐ.வி தொற்றுகள் 40 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், எச்.ஐ.வி தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம், சரிவு விகிதம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் கடுமையாக மாறுபடும் என்றும், இதில் இலங்கை தனித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 824 புதிய எச்.ஐ.வி. வழக்குகள் பதிவாகியுள்ளன, இது ஒரு வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய மதிப்பீடுகள் நாட்டில் சுமார் 5,700 பேர் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு 121ஆக இருந்த எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 824 ஆக அதிகரித்துள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே தொற்றுகள் ஒன்பது மடங்குக்கும் மேலாக அதிகரித்து.
ஆண்களே பெரும்பான்மையான தொற்றுநோய்களுக்குக் காரணமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 தொடக்கம் 24 வயதுடையவர்களிடையே பதிவான தொற்றாளர்கள் 2010ஆம் ஆண்டு 13ஆக காணப்பட்ட போதிலும், 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
