தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்

தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை நகருக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக தனது கருத்தை முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான அனுமதி வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.

கூட்டாட்சிக் கருத்தியலை இவ்வாறு சிதைப்பதை சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறியது போன்று மதுரை மற்றும் கோவையிலும் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This