பிக்குகள் மீதான தாக்குதல்கள் குறித்து அமைச்சர் விசாரிக்க வேண்டும் – நாமல் எம்.பி கோரிக்கை

திருகோணமலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை தொடர்பான சம்பவத்தின் போது, இரண்டு பிக்குகள் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக நாமல் ராஜபக்ச நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக இரண்டு பிக்குகள் எவ்வாறு பொலிஸாரினால் தாக்கப்பட்டனர் என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு இதுபோன்ற இனவெறிப் பிரச்சினைகள் எழுப்பப்படுகிறதா என்றும் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள விகாரை ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இன்று காலை புத்தர் சிலை பாதுகாப்புக்காக வெளியே கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறினார்.
எனினும், புத்தர் சிலை பாதுகாப்புக்காக வெளியே கொண்டு செல்லப்பட்டபோது, இரண்டு பிக்குகள் பொலிஸாரினால் தாக்கப்பட்டனர். 1951 இல் நிறுவப்பட்டு 2004 இல் புனித இடமாக அறிவிக்கப்பட்ட குறித்த இடம், கிழக்கு மாகாணத்தின் பழமையான அறிநெறி பாடசாலையாகும்.
இந்த விடயத்தில் அரசாங்கமாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதை ஒரு இனவாத பிரச்சினையாக மாற்ற வேண்டாம். நீங்களே தலையிட்டு இரு தரப்பினரையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு கொண்டு வந்து இதற்கு நியாயம் செய்யுங்கள்.” என்றார்.
