கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
எதிர்வு கூறியுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 09 மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்
செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Share This