வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு

வரவு செலவுத் திட்டம்!! அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் கடந்த எட்டாம் திகதி ஆரம்பமானது.  இந்நிலையில், இரண்டாம்  வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் மாலை நடத்தப்படவுள்ளது.

இதன்போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக  அரசியல்  கட்சிகளின் கூட்டங்கள்   இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன எதிராக வாக்களிக்கும் என தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளன.

வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பெரும்பான்மைபலம் தன்வசம் உள்ளபோதிலும்,  எதிரணிகளும் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும்.  இந்நிலையில், வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This