தலாவ பஸ் விபத்து- உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு

Update – தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
…………………………………………………………………………………………………………………………
அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
