கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய இராஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலை கெஹல்பத்த பத்மேவால் திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளன, மேலும் இஷாரா செவ்வந்தியும் இந்தக் கொலை தொடர்பான பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கெஹல்பத்த பத்மே, கமாண்டோ சாலிந்த, தரூன், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கைப் பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய இஷாராவின் மாமா பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதன்படி, அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
