யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை

யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்றைய தினம் (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர்.

CATEGORIES
TAGS
Share This