தமிழகத்திலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி

கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கம் விலை இன்றைய தினம் பவுனுக்கு 1200 ரூபா குறைவடைந்துள்ளது.
இதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபா குறைவடைந்து ஒரு கிராம் 11,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் பவுனுக்கு 1200 ரூபா குறைவடைந்து ஒரு பவுன் 90,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் தங்கம் விலை பவுனுக்கு 1600 ரூபா குறைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 05 ரூபா குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஒரு கிராம் 165 ரூபாவுக்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ கிராம்.1,65,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

