ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற விவாதத்தின் போது தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This