வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் வாகன விபத்து – நால்வர் காயம்

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
