மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க

மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொழும்பில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி தனது சொந்த ஊரான தங்காலைக்கு குடிபெயர்ந்தார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரை முன்னணி அரசியல் தலைவர்கள், இராஜந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் நாளாந்தம் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கலைஞர்கள் குழுவொன்று சந்தித்திருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமாரி முனசிங்க இவ்வாறு கூறியிருந்தார்,

“நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு வந்தேன், இந்தப் பயணத்தில் அவர் மீண்டும் மீண்டும் வருவார் என்று காத்திருந்தேன். அவர் செய்த மற்றும் சொன்னவற்றின் நன்மைகளை உண்மையிலேயே சிந்திக்க நான் இங்கு வந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாங்கள் உண்மையில் மகிந்தவை பார்த்தபோது, ​​எங்கள் இதயங்களில் இருந்த தீப்பிழம்புகள் அணைந்தன, புத்தரைக் கண்டது போல் நிம்மதி அடைந்தோம்.” என்றார்.

Share This