அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்

தமிழகத்தின் கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் எதிர்வரும்
17 ஆம் திகதி செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க தீரமானித்துள்ளதாக
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் உலகையெ அதிர்ச்சியில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.