கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கம்பளை – தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் காமடைந்த மற்றுமொரு பெண்

சிகிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலொன்றில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் அந்த பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This