கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS FITZGERALD’ (DDG 62) கப்பல், விநியோகம் மற்றும் சேவை தேவை கருதி நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள Destroyer வகையைச் சேர்ந்த குறித்த கப்பல் 154 மீற்றர் நீளமுடையது.

கப்பலின் கட்டளையிடும் அதிகாரியாக போல் ரிச்சட்சன் செயற்படுகின்றார்.

CATEGORIES
TAGS
Share This