கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75% ஆக தொடர்ந்தும் பேணப்படும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்றும் நாணயக் கொள்கை சபை கருதுகிறது.