தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதன்படி, 22 கரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 560 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​வின் பெறுமதி ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிப்​பு, அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்​ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்துள்ளது.

இதன்படி, சென்​னை​யில் 22 கரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 10,360 ரூபாவுக்கும் பவுன் ஒன்றுக்கு 560 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் தங்கம் 82,880 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்​கம் பவுன் ஒன்றுக்கு 90,416 ரூபா விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 18 கரட் தங்கம் பவுனுக்கு 68,640 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share This