இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 08 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சயிப் ஹசன் 61 ஓட்டங்களையும் Towhid Hridoy 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை சார்பில் பந்துவீச்சில் தசுன் சானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Share This