மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதும், அதனைப் பாதுகாப்பதும் அவசியம்.
அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை
உடன்படிக்கையில் இருந்து வெளியேறினால் நாட்டில் மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் எழும்.
டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய சர்வதேச பிணைமுறி கூப்பன் வழங்குவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.
நாம் திவால்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பின்னர் வங்கிகளும் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.
இதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.