ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 140 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை
அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

Share This