எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளார்.

தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 04 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்
ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Share This