எல்ல,வெல்வாய விபத்து – பஸ்ஸின் உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

எல்ல,வெல்வாய விபத்து – பஸ்ஸின் உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைதான எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்ஸின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் உரிமையாளராக அவர் அதனை உரிய முறையில் பராமரிக்காமை காரணமாகவே இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 04 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிய போது தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பஸ், எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதன்போது பஸ் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் தங்காலை நகரசபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This