வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது

வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது

வென்னப்புவ பகுதியில் இடும்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி, வாள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

காரில் வருகை தந்த மூவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் லுணுவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடை நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 36 வயதுடைய நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் மேன் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைக்காக கையொப்பமிட பொலிஸ் நிலையத்திற்கு சென்று வௌியேறும் சந்தர்ப்பத்தில் காரில் பயணித்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 03 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This