யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு

யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் சுமார் 30 துப்பாக்கிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட
வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை தொடர்ந்து பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு
பணியின்போது 30 T 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )