சிஐடியில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் முன்னர் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது> லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்றமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.