
துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
CATEGORIES இலங்கை
