பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் தனது முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This