வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியதால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வலுயுறுத்தினார்.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பருத்தி மீதான வரிகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், இந்திய புடவை கைத்தொழில் துறைக்கு உதவியாக பருத்தி மீதான 11% இறக்குமதி வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.